Show all

நடிகை ஸ்ரீதேவி உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது ஏன்

17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு விளக்கமளித்துள்ளது.

துபாயில் காலமான ஸ்ரீதேவி உடல்   நேற்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செயய்யப்பட்டது. இது தொடர்பாக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

குடியரசுத் தலைவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், தலைமை அமைச்சர்கள், நடுவண் அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோர் இறந்தால் மட்டுமே அவர்களுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும். தற்போது முழு அரசு மரியாதை அளிக்கும் பொறுப்பு மாநில அரசுகளிடமே வழங்கப்பட்டுள்ளது.

எனவே தற்போது யாருக்கு முழு அரசு மரியாதை தரவேண்டும் என்பதை மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம். மறைந்த ஒருவருக்கு உள்ள புகழ் மற்றும் சமுதாயத்துக்கோ அல்லது அவர் சார்ந்த துறைக்கோ அவர் ஆற்றிய தொண்டுகளைக் கருத்தில் கொண்டு முழு அரசு மரியாதை தரலாம் என விதிகள் உள்ளன. இந்த நிலையில் ஒருவர் இறக்கும்போது அவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கலாமா என்பது தொடர்பாக முதல்வர், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கலாம். அவ்வாறு முடிவெடுத்த பின்னர் மரணமடைந்த ஒருவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கும் பொறுப்பு காவல்துறைக்கு வழங்கப்படும். 

அந்த வகையில்தான் ஸ்ரீதேவி உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது. என்று மகாராஷ்டிரா அரசு விளக்கமளித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,713. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.