Show all

நாகர்கோவில்- திருவனந்தபுரம் பொதுமக்கள் தொடர்வண்டி உள்பட 20 தொடர்வண்டிகளை ரத்து செய்ய முடிவு

17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தென்னக தொடர்வண்டித் துறையில் நாகர்கோவில்- திருவனந்தபுரம் உள்பட  20 பொதுமக்கள் தொடர்வண்டிகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சமீபத்தில் போக்குவரத்து கழக பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது. அதன்படி  நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே பேருந்து கட்டணம் ரூ.72 ஆக வசூலிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் திருவனந்தபுரம்- நாகர்கோவில் இடையே தொடர்வண்டி கட்டணமோ மிகவும் குறைவு.

இதனால் மக்கள் பேருந்து பயணத்தை தவிர்த்து தொடர்வண்டிகளை நாடத் தொடங்கினர். இதனால் தொடர்வண்டிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

இந்த நிலையில் தொடர்வண்டித் துறை நட்டத்தில் இயங்குவதாகவும், இதன் பொருட்டு, பொதுமக்களுக்கான சுமார் 20 தொடர்வண்டிகளை ரத்து செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடுவண் அரசின் தொடர் வண்டித் துறையின் இந்த முடிவு,  தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,713. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.