Show all

கடுமையாக முயன்ற ஒரு பெண்ணும் போகமுடியவில்லை சபரிமலைக்கு! அரசால் முடியவில்லையா? முயலவில்லையா! மக்களின் கேள்வி

31,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை வரலாற்றில் முதல் முறையாக 40 அகவையுடைய பெண் ஒருவர் ஐயப்பனைத் தரிசிக்க சென்றுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 அகவைக்கு மேற்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தனர். ஆண்கள் மட்டுமே செல்லும் ஒரு இடமாக சபரிமலை இருந்து வந்தது. இந்த நிலையில் அனைத்து அகவையுடைய பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என உச்சஅறங்;கூற்றுமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதற்கான எதிர்ப்பு அரசியல் ஆதாயமாக முன்னெடுக்கப் பட்டு வருகிறது.
ஆனால் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண் நேற்று சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கினார். இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரி மலை கோயிலின் நடை, இன்று மாலை திறக்கப்படுகிறது. இதையடுத்து ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த மாதவி என்ற பெண் தன் இரு குழந்தைகளுடன் சபரிமலைக்கு சென்றார். பம்பையில் இருந்து சபரிமலைக்கு வந்த மாதவிக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு அளித்தனர். நிலக்கல் பகுதிக்கு வந்த அவருக்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை மீட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து சென்ற மாதவி, ஐயப்பனை தரிசிக்க எதிர்ப்பு வலுத்தது. தனக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் அவர் ஐயப்பனை தரிசிக்காமல் மீண்டும் திரும்பி வந்தார். இருந்த போதிலும் பல கட்ட எதிர்ப்புகளையும் தாண்டி சபரிமலைக்கு சென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் மாதவி. 
ஒற்றைப் பெண்ணைக் கூட சபரிமலைக்கு அனுமதிக்க முடியவில்லை. அரசால் முடியவில்லையா? விருப்பம் இல்லையா! என்பதே மக்களின் கேள்வியாக இருக்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,943.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.