Show all

மோடியின் சாப்பாட்டுக்காக மாதமொன்றுக்கு செலவாகும் தொகை ஒரு கோடியே 20 லட்சம்: அல்பேஸ் தாக்கூர்

27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாளொன்றுக்கு 4 லட்சம் ரூபாய் உணவுக்காக செலவிடும் மோடியால் மாதம் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவாவதாக, குஜராத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் அல்பேஸ் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் ஆளும் பாஜகவின் அவலங்களை அம்பலப் படுத்த காங்கிரஸ் கூட்டணி தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. குஜராத்தில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய அல்பேஸ் தாக்கூர், மோடி தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காளான் சாப்பிடுவதாகவும், ஒரு காளானின் விலை 80 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவித்தார். அதனால் முன்னர் கறுப்பு நிறத்தில் இருந்த மோடி அழகாக மாறியுள்ளதாக விமர்சித்தார்.

 

நாளொன்றுக்கு 5 காளான் சாப்பிடும் மோடியால் மாதத்துக்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவாவதாகவும், இது கேலி கூத்து என்றும் அல்பேஸ் தாக்கூர் விமர்சித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,635

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.