Show all

பாம்பன் தீவையும், ஈழத்தின் தலைமன்னாரையும் இணைக்கும் பழந்தமிழர்களால் கட்டப் பட்ட, மன்னார்பாலம்!

27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்றைய இந்தியாவின் பாம்பன் தீவையும், ஈழத்தின் தலைமன்னாரையும் இணைக்கும் பழந்தமிழர்களால் கட்டப் பட்ட, கடலில் முழுகிய தரைவழி வணிகத்தின் பொருட்டு சுண்ணாம்புப் பாறைகளால் ஆன, ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மன்னார்பாலம்-

சோழர் காலத்தில் இராமணத்தைத் தூக்கிப் பிடிக்க, இராமயண வானரங்களால் கட்டப் பட்ட பாலமாக சித்தரிக்கப் பட்டு இராமர் பாலம் ஆனது. ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களோ அதை ஆதம் பாலம் என்றே பதிவு செய்தனர்.

இந்த மன்னார் பாலம், இயற்கையாக தானாக உருவாகியிருக்கக் கூடும் என்று தமிழக வரலாற்றின் பெரும்பகுதி தெரியாக ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் மன்னார் பாலத்தை மனிதனால் உருவாக்கப்பட்டது என அமெரிக்க அறிவியல் தெலைக்காட்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த அறிவியல் தொலைக்காட்சி நிறுவனத்தின், நிபுணத்துவம் பெற்றவர் விவரித்து கூறும் 2நிமிட அந்த ஆவணபடத்தில் ராமேஸ்வரத்தில் ராமர் பாலம் அல்லது ஆடம்ஸ்பிரிட்ஜ், என்கிற மன்னார்பாலம் நாசாவின் புகைபடங்களின்படி 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்களால் இந்தியாவிற்கும் இலைங்கை தீவுக்கும் இடையே பாலம் அமைக்க மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதனின் மிகப்பெரிய சாதனை இந்த பாலம் என கூறியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,635

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.