Show all

தொலைத் தொடர்புத் துறையில் மேலும் ஒரு புதிய நிறுவனம்

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சேவை, தொலைத்தொடர்பு நிறுவனங்களை அதிரச் செய்தது. ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி, வாடிக்கையாளர்களை அள்ளி விட்டது. இதையடுத்து பிற நிறுவனங்களும் சலுகைகளை அதிரடியாக அறிவிக்கத் தொடங்கின.

இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த ‘வைபைடப்பா எனப்படும் புதிய நிறுவனம் ஒன்று களமிறங்கியுள்ளது. அது தொடங்கி 14 மாதங்களே ஆன நிலையில், இது நிர்ணயித்துள்ள கட்டணங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குறிப்பாக,

24 மணிநேர சேவைக்கு

100 எம்பி தரவு - ரூ.2

500 எம்பி தரவு - ரூ.10

1 ஜிபி தரவு - ரூ.20

முதல்கட்டமாக வைபைடப்பா நிறுவனம் தனது சேவையை, சிறிய தேநீர் கடைகள், அடுமனைகள் என பெங்களூருவில் கால் பதிக்க தொடங்கி விட்டது.

ஓர் இணைப்பை பெற ரூ.4,000 வரை செலவாகிறது. அழைப்பு விடுத்த 6 நாட்களில் வைபைடப்பா வசதியை பெற்றுவிட முடியும்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,614

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.