Show all

ஒங்க மறதிக்கெல்லாம் மாணவர்கள் ஊறுகாயா

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைபள்ளியில் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி சமீபத்தில் வழங்கப்பட்டது. இதற்காக மாணவர்களிடம் இருந்து 50ரூபாய் முதல் 250ரூபாய் வரை கட்டணமாக பள்ளி நிர்வாகத்தினர் வசூலித்தனராம்.

கொடுக்க மறுத்த மாணவர்களுக்கு மடிக்கணினி தர மாட்டோம் என்று கூறியதோடு, பள்ளியில் பெரிய அளவில் நிகழ்ச்சியை நடத்தியதற்கான செலவு தொகையை ஈடுகட்ட இந்தப் பணம் வசூலிக்கப்படுவதாக பள்ளி நிர்வாகத்தினர் கூறியிருந்தனர்.

இந்தப் பணத்தை ஆசிரியர் ஒருவர் வசூலிக்கும் போது அவருக்கு தெரியாமல் செல்பேசியில் அதை காணொளி எடுத்த மாணவர்களில் சிலர், கட்செவிஅஞ்சல் (wattsup) பதிவு செய்து பல்வேறு அணிகளுக்கு அனுப்பி வைத்ததால் அது தீயாகப் பரவி மற்ற பள்ளி மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் நாகராஜன் கூறும் போது, மடிக்கணினி வழங்குவதற்காக பள்ளியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கான செலவினை ஈடுகட்ட அனைத்து மாணவர்களிடமும் 50ரூபாய் வசூலித்து கொள்ளலாம் என்று பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் முடிவு செய்து அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும்,

மேலும் கடந்த ஆண்டு கணினி அறிவியல் படித்த மாணவர்களிடம் அரசுக்கு செலுத்த வேண்டிய கல்வி கட்டணம் 200ரூபாயை வசூலிக்க மறந்து விட்டோம். அதை மடிக்கணினி வாங்கும் போது சேர்த்து வசூலித்தோம். அந்த தொகையை அரசு கருவூலத்தில் செலுத்தியுள்ளோம்.

என்றும் கூறுகிறார்.

(ஒங்க மறதிக்கெல்லாம் மாணவர்கள் ஊறுகாயாப்பா?)

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செந்தில்வேல்முருகன் இன்று முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைபள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,614

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.