Show all

கெத்து காட்டும் அக்பர்! எம்.ஜெ.அக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்களா

30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதழியலாளராக இருந்த காலத்தில், இந்நாள் இணைஅமைச்சர் எம்.ஜெ.அக்பர் தங்களிடம் தவறாக நடக்க முயன்றார் என ஏழு பெண் பத்திரிகையாளர்கள் சில நாட்களுக்கு முன் புகார் கூறி இருந்தனர். புகார் நேரத்தில் அக்பர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்தார். 

நாடு திரும்பிய உடன் அவர் தன் மீது புகார் கூறிய பெண் இதழியலாளர் பிரியா ரமணிக்கு எதிராக அறங்கூற்றுமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார். அவர் சார்பில் அறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்யப்பட்ட வக்காலத்தில், 97 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர். 

இது குறித்து விசாரித்த போது, அக்பர் சார்பில், அறங்கூற்றுமன்றத்தில் கரன்ஜாவலா குழுவினர் என்ற சட்ட நிறுவனம் வாதிட உள்ளது. அதன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், எங்கள் நிறுவனத்தில், 100 வழக்கறிஞர்கள் உள்ளனர். வழக்கமாக அறங்கூற்றுமன்றத்தில் பதிகை  செய்யப்படும் வக்காலத்தில், அனைத்து வழக்கறிஞர்கள் பெயர்களையும் நாங்கள் குறிப்பிடுவது வழக்கம். ஆனால், எங்கள் குற்றவியல் வழக்கு குழுவில் ஆறு வழக்கறிஞர்கள் தான் உள்ளனர். அவர்கள் தான் அறங்கூற்றுமன்றத்தில் அணியமாவார்கள் என்றார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,942.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.