Show all

குழப்பமோ குழப்பம்! ஏழைகளின் வங்கிக் கணக்கில் தேடித் தேடி குவியும் கோடிகள்

30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானில் இறந்தவர் ஒருவரின் வங்கி கணக்கில் 450 கோடி ரூபாய் பணம் போடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போது புதிய பிரச்சனை உருவாகி உள்ளது. அங்கு சாதாரண மக்களின் வங்கி கணக்கில், கோடி கணக்கில் பணம் மர்மமாக போடப்படுகிறது. அந்நாட்டு உளவுத்துறை இதுகுறித்து விசாரித்து வருகிறது. 

இபால் ஆராய்ன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார். இந்த நிலையில் நேற்று இவரது வங்கி கணக்கில் 450 கோடி ரூபாய் பணம் போடப்பட்டு இருக்கிறது. இவ்வளவு பணத்தை இவருக்கு போட்டது யாரென்று தெரியவில்லை. அவரது உறவினர்கள் யாரும் இவ்வளவு பணம் அளிக்கவில்லை என்றும் உறுதியாகி உள்ளது. மேலும் அவர்கள் சொந்தங்களில் எல்லோருமே ஏழைகள்தான், இவ்வளவு பணம் அவர்களிடம் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இறந்த ஒருவருக்கு ஏன் 4 ஆண்டுகள் கழித்து பணம் போடப்பட வேண்டும் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. 

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்லாமாபாத்தை சேர்ந்த தானி ஓட்டுனருக்கு 300 கோடி ரூபாய் பணம் போடப்பட்டது. அதேபோல் மாணவர் ஒருவருக்கு 250 கோடி ரூபாய் பணம் போடப்பட்டது. இவர்கள் இருவருக்குமே இவர்களுக்கு தெரியாமல்தான் பணம் போடப்பட்டுள்ளன. இவர்கள் அப்பாவிகள் என்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இது அந்நாட்டு உளவுத்துறைக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தீவிரவாதிகளின் வேலையாக இருக்குமோ என்று அவர்கள் விசாரித்து வருகிறார்கள். ஆனால் இவ்வளவு கோடி பணத்தை வேண்டும் என்றே வெளியேவிட்டு மாட்டிக்கொள்வது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,942.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.