Show all

31 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்! கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் மசூத் அசார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆற்றுநீர் பங்கீடு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

உச்சஅறங்கூற்றுமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளின் படி கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை என தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். கழிமுக சாகுபடி விவரம், குடிநீர் தேவை என அனைத்து அம்சங்களும் முன்வைக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் நடப்பு மாத பங்காக தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,836.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.