Show all

உலகத்தின் அதி உயர சிறுவன்! பதினோரு அகவையில் 6 அடி

18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகிலேயே இந்த அகவையில் அதிக உயரம் கொண்ட சிறுவன் என்ற பெருமை பெற்ற சிறுவன், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ரேன் கேயூ. 

பதினோரு அகவையுள்ள இவனது தற்போதைய உயரம் 6 அடியாகும். இதன் மூலம், இதுகுறித்து ரேன் கேயூ கூறுகையில், எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் அகவை குழந்தைகளை விட மிக உயரமாகவே இருந்தேன். அதனால் சிலர் என்னுடன் விளையாட தயங்குவார்கள்.

பள்ளியிலும் என்னுடன் படிக்கும் சக மாணவர்கள், என் இடுப்பு உயரமே இருக்கிறார்கள். சாலைகளில் நடக்கும்போது எல்லோரும் என்னை அதிசயமாக பார்ப்பார்கள். ஆனாலும், இந்த உயரம் தான் கின்னஸ் சாதனை புத்தகத்தில் என்னை இடம்பெற வைத்திருக்கிறது என தெரிவித்துள்ளான். 

ரேனின் தாய் இதுதொடர்பாக கூறுகையில், அளவுக்கு அதிகமான உயரத்தால் பயந்துபோய், பல பரிசோதனைகளை மேற்கொண்டோம். ஹார்மோன், பிட்யூட்டரி சுரப்பியில் எதுவும் பிரச்சனை இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,836.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.