Show all

நான்குமணி நேரத்தில் முதலீடு இல்லாமல் இரண்டு இலட்சம் வருமானம் ஈட்டிய குஜராத்காரர்.

ரூ.11,677 கோடி ராமேஷ் சாகர் பங்குச்சந்தைக் கணக்கில் தவறுதலாக வந்திருந்த நிலையில், அந்தப் பணத்தில் இரண்டு கோடியை மூதலீடு செய்து, முதலீடு இல்லாமல், இரண்டு இலட்சத்தை தன்கணக்கில் ஈட்டி விட்டார் ராமேஷ் சாகர்.

32,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5124: குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் சாகர். இவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகிறார். இந்நிலையில், அவரது பங்குச் சந்தை முதலீட்டுக்கான கணக்கில் நாளது 10,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124 (26.07.2022) அன்று ரூ.11,677 கோடி வரவாகி இருந்தது.

இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது, ஏன் வந்தது என்பது குறித்தெல்லாம் அவர் ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. உடனடியாக, அதில் ரூ.2 கோடிக்கு சில பங்குகளை வாங்கிவிட்டார். அந்த முதலீடு வழியாக அதே நாளில் ரூ.5 லட்சம் லாபம் ஈட்டினார். 

இதற்கிடையில், இரவு 8.30 மணி போல அவரது கணக்கிலிருந்த பணத்தை அவரது வங்கி திரும்பப்பெற்றது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி நிகழ்ந்துவிட்டதாக நிறுவனம் அவருக்கு தெரிவித்தது. 

கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ரூ.11,677 கோடி ராமேஷ் சாகர் கணக்கில் இருந்துள்ளதோடு அந்தப் பணத்தில் இரண்டு கோடியை மூதலீடு செய்து, 03.30க்கு பங்குச்சந்தை முடிகிற நிலையில், ஏறத்தாழ நான்கு மணி நேரத்தில் முதலீடு இல்லாமல், இரண்டு இலட்சத்தை தன்கணக்கில் ஈட்டி விட்டார் ராமேஷ் சாகர். ஒருவேளை பங்குச் சந்தை சரிந்திருந்தால் இப்படி வருமானம் பெரிதாக வந்தது போலவே இழப்பும் பெரிதாகி, அந்தத் தொகையைக் களவாடியதாக குற்றவாளி ஆகியிருந்திருப்பார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,374.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.