Show all

26,500 மாணவர்கள் தற்கொலை! இரண்டு ஆண்டுக் கணக்கு; தற்கொலைகளில் தமிழகத்திற்கு 2-வது இடம்

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் மொத்தம் 26,500 மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்டுள்ளதாக நடுவண் உள்துறை இணை அமைச்சர் மேலவையில் அறிக்கை பதிகை செய்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு மாணவர் தற்கொலை நடக்கிறது. இது நடுவண் அரசுக்குத் தெரியுமா? இதைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்று மேலவையில் திமுகவைச் சேர்ந்த கனிமொழி கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த நடுவண் உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், நடுவண் குற்றவியல் ஆவணக் காப்பகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின் படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 26,500 மாணவர்களின் மரணங்கள் பதிவாகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருவது குறித்து வருத்தம் தெரிவித்த அவர், 

மகாராஷ்ட்ராவிலும், தமிழகத்திலும் தான் அதிகப்படியான மாணவர்களின் தற்கொலைகள் பதிவாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதன்மையாக கல்விச்சூழல் தான் காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தற்கொலைகள் அனைத்தும் மன அழுத்தம், கல்விச் சூழல் பிரச்னைகள், குடும்பப் பிரச்னைகள், போட்டிச்சூழல், சமூக ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட காரணிகளால் நிகழ்ந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஏற்றத்தாழ்வும், சாதிய ரீதியிலான பிரச்னைகள் சமீபத்தில் அதிகப்படியான மாணவர்களின் மரணங்களுக்கு காரணமாக இருந்துள்ளது. ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை நாடு முழுவதும் பல்வேறு விவாதத்தை எழுப்பியது. அதன் மூலமே உயர்கல்வி நிறுவனங்களில் நிலவி வரும் சமூக சாதிய ஏற்றத்தாழ்வுகள் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணமும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இனியும் இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுக்க நடுவண் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், மாணவர்கள் மனநலனை பாதுகாக்க பல்வேறு மாநிலங்களிலும் மனநல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கல்வி நிறுவனங்களில் பல்வேறு திறன் வளர்ப்பு திட்டங்களும், கலந்தாய்விற்கான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளாதகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இதற்கு மாநில அரசுகளும் போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், நடுவண் அரசு தனது வரவு-செலவில் ஆண்டுக்கு 0.06 விழுக்காடு தொகையை, மாணவர்களின் மனநலனை பாதுகாக்கும் திட்டங்களில் செயல்படுத்துவதாகவும் வருங்காலங்களில் மாணவர்களின் மரணங்கள் குறையும் என்றும் அவர் தனது பதிலில் குறிப்பிட்டார்.

தொழில் தொடங்குவதற்கான வாய்ப்;புகளையும், கடனுதவிகளையும், பன்னாட்டு கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்து விட்டு, படிக்காதவர்களை உடலுழைப்புக் கூலித் தளத்தில் மிகமிக குறைந்த கூலிக்கு அலைய விடுவதும், நிருவாகக் கூலித் தளத்தில் குறைந்த நபர்களுக்கே அதிக சம்பள வாய்ப்புகளை வழங்;கி நிருவாகக் கல்விக்கு கடுமையான போட்டிகளைக் கார்ப்பரேட் பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்குவதால். நிருவாகக் கல்வி போட்டியும், மனஉளைச்சலுக்குமான தளமாக அமைவதாலேயே அதிக மாணவர்கள் தற்கொலைக்கான காரணமாக அமைகிறது.

இதில் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பெறுவதற்கு ஆங்கிலமொழித் திணிப்பும், நடுவண் அரசு பணிகளில் நுழைவதற்கு ஹிந்தித் திணிப்பும்

இந்த வேலைகளே கனவாக பெற்றோர்களின் ஆங்கில, ஹிந்தி பிறமொழி நிருவாகக் கல்வித் திணிப்பும் மனஉளைச்சலுக்கான காரணங்கள்.

தொழில் தொடங்குவதற்கான கல்வியும், வாய்ப்புகளும், கடனுதவியும் அரசு வழங்குமானால் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் குறையும். நிருவாக வேலைவாய்ப்புகளுக்காக பிறமொழிக் கல்வியையும், மனப்பாடக் கல்வியையும், திணிக்கும் பெற்றோர்கள், ஹிந்தியைத் திணிக்கும் நடுவண் ஹிந்தி வெறி அரசு, ஆங்கிலத் திணிப்பில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து மாணவர்கள் விடுதலை பெற்று தொழில் தொடங்கி ஒவ்வொருவரும் ஒரு உடைமையாளராக உயர்வதோடு, கார்ப்பரேட்டுகளிடமும், கார்ப்பரேட் பினாமி அரசுகளிடமும் இருந்து இந்தியாவை மீட்டெடுப்பார்கள். மாணவர்கள் தற்கொலைக்கு முற்றுப் புள்ளி வைக்கப் படும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,730.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.