Show all

28 விட 21 பெருசு பாஜக கணக்கு

இருபத்தெட்டை விட இருபத்தொன்றுதான் பெருசு மணிப்பூர் ஆட்சியைப் பிடிக்கும் பாஜக கணக்கு   

     மணிப்பூர் மாநிலம் தவுபால் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இரோம் ஷர்மிளாவை தோற்கடித்து அம்மாநில முதல்வர் இபோபி சிங் வெற்றி பெற்றார்.

     ஆனால் அவரது வெற்றி அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க உதவவில்லை. இபோபி சிங் உடனடியாக தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என மணிப்பூர் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

     60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியமைக்க 31 இடங்களை கைப்பற்றியாக வேண்டும். அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி பெற்றது. அதை விட பெரியதான 21 இடங்களை கைப்பற்றி பாஜக 2 வது இடத்தில் இருந்தது. நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 4 இடங்களும், லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைத்தன. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.

     இந்நிலையில் பாரதீய ஜனதா தனக்கு 32 சட்டமன்றஉறுப்பினர்கள் ஆதரவு உள்ளது என கூறி ஆளுநர் நஜ்மா கெப்துல்லாவிடம் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது. தங்களுக்கு தேசிய மக்கள் கட்சி உட்பட 32 சட்டமன்றஉறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக பாஜக கூறியுள்ளது.    

     இந்நிலையில் அம்மாநில முதல்வர் இபோபி சிங்கை ராஜினாமா செய்யக்கோரி அம்மாநில ஆளுநர் நஜ்மா கெப்துல்லா அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,    

     பாஜக உரிமை கோரிய ஒரு மணி நேரத்தில் முதல்வர் இபோபி சிங்கும் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவரும் தங்களுக்கு தேசிய மக்கள் கட்சி சட்டமன்றஉறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்தார்.

     பாஜகவும் கடிதம் கொடுத்துள்ளது ஏனென்றால் தேசிய மக்கள் கட்சியின் சார்பில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக பா.ஜனதாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக எனக்கு கடிதம் கிடைத்தது. இதனால் சட்டமன்றஉறுப்பினர்களை நேரில் அழைத்து வந்து நிரூபிக்கும்படி கூறியதாக ஆளுநர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்

     அதேநேரத்தில் இபோபி சிங்கை பதவிவிலகிடக் கேட்டுக் கொண்டதாகவும் ஆளுநர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

     இபோபி சிங் முதல்வர் பதவியை விட்டு விலகினால் தாம் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.    

     இரோம் ஷர்மிளாவை தோற்கடித்தார் பதவியை ராஜினாமா செய்யவுள்ள முதல்வர் இபோபி சிங்.

     தன்னை எதிர்த்து போட்டியிட்ட போராளி இரோம் ஷர்மிளாவை வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற வைத்து தோற்கடித்தார். இருப்பினும் இபோபி சிங்கின் வெற்றி அவருக்கு ஆட்சியமைக்க உதவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.