Show all

விஜய் ஹசாரே டிராபி போட்டி அரை இறுதியில் தமிழகம்

விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் கால் இறுதியில் குஜராத் அணியுடன் மோதிய தமிழகம், 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.  டெல்லி பாலம் ஏ மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த குஜராத் அணி 49.4 ஓவரில் 211 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ருஜுல் பட் ஆட்டமிழக்காமல் 83 ரன் (98 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். தமிழக பந்துவீச்சில் கேப்டன் விஜய் ஷங்கர் 3, ரகில் ஷா, சாய் கிஷோர் தலா 2, அபராஜித், சுந்தர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

 

அடுத்து களமிறங்கிய தமிழகம் 42.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. அதிகபட்சமாக கங்கா ராஜு 85 ரன் (95 பந்து, 12 பவுண்டரி) குவித்தார்.

 

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த மற்றொரு கால் இறுதியில் பரோடா அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகா அணியை வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. 16ம் தேதி நடக்கும் முதல் அரை இறுதியில் தமிழகம் - பரோடா அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.