Show all

மத்திய வேளாண்மை அமைச்சகம் இனி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை என அழைக்கப்படும்

மத்திய வேளாண்மை அமைச்சகம் இனி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை என அழைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் விவசாயிகள் நலன் குறித்தும் பேசினார். பெயர் மாற்றம் வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியை பெருக்கவேண்டியது அவசியமாகும். இதை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வேளாண்துறையின் அனைத்து பிரிவுகளும் வளர்ச்சியடையும் போது அதில் விவசாயிகள் நலனும் மேன்மை அடையவேண்டும். இதற்காக வேளாண்மை அமைச்சகம் இனி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் என்று பெயர் மாற்றப்படும்.

வேளாண் உற்பத்தியை பெருக்குவதில் மட்டுமின்றி விவசாயிகளுக்கு மின்சாரம் மற்றும், நீர்ப்பாசனத்தை வழங்குவதிலும் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு இதற்காக பிரதம மந்திரி கிரிஷி சின்சாய் யோஜ்னா என்னும் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க மத்திய அரசு உறுதி கொண்டிருக்கிறது. விவசாய பயன்பாட்டுக்காக 100 சதவீதமும் வேம்பு முலாம் பூசப்பட்ட உரங்கள் கிடைத்திட மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. மண்வள பாதுகாப்பு அட்டை மானிய விலையில் வழங்கப்படும் ரசாயன உரங்கள், விவசாயம் அல்லாத மற்ற துறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விடக்கூடாது என்பதற்காக வேம்பு முலாம் பூசப்பட்ட உரங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

அடுத்த 3 ஆண்டுகளில் ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த மண்வள பாதுகாப்பு அட்டை என்ற திட்டமும் தொடங்கப்பட்டு உள்ளது.

எம்.எஸ்.சுவாமிநாதன் வரவேற்பு வேளாண்துறையை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி அறிவித்த பல்வேறு திட்டங்களை பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வரவேற்று இருக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.