Show all

மூன்றாவது நாளாக நேற்றும் நாடாளுமன்றம் முடக்கம்

முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடிற்கு உதவிய விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் எழுப்பிய அமளியால் மூன்றாவது நாளாக இன்றும் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

காலை 11 மணிக்கு மக்களவை தொடங்கியதுமே, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஐ பி எல் வியாபம் முறைகேடு மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கொடுக்கப்பட்ட நோட்டீஸ் நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார். இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கியதும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக, அவையை 12 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார். 12 மணிக்கு அவை கூடியதும் மீண்டும் கூச்சல் குழப்பம் நீடித்தது. இதையடுத்து, அவையை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2 மணிக்கு சபை கூடிய போதும், கூச்சல் குழப்பம் நீடித்ததால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.