Show all

மக்களவைத் தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு! எஸ்.ஏ.சந்திரசேகரின் அடடே பதில்

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில், தலைமைஅமைச்சராக இருக்கும் மோடி மீண்டும் ஆட்சியை பிடிக்கக் கூடாது என்பது தமிழர்களின் முடிவாக இருக்கிறது, அதில் தமிழர்கள் மிக தெளிவாக உள்ளனர்.

நான் கடந்த 40 ஆண்டுகளாக திரைப்படத்தில் உள்ளேன். முன்பு திரைப்படத்தில் நாணயம் இருந்தது. தற்போது தமிழ்ராக்கர் படங்களை போட்டி போட்டு இணையதளங்களில் வெளியிடுவதால் திரைப்படத் துறை அழிந்து வருகின்றது.

திரைப்படத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் அது அரசால் மட்டும் தான் முடியும். தற்போது அந்த அரசை தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. முன்பு திரைப்படத்தை நேசித்து செய்து வந்தனர். காதலித்து செய்யக்கூடிய பணி. ஆனால் தற்போது திரைப்படத்தில் வியாபாரிகள் வந்துவிட்டனர்.

மக்களவை தேர்தலில் விஜய் யாருக்கு ஆதரவு தருவார் என்ற கேள்விக்கு, அது அவரிடம் தான் கேட்க வேண்டும் என்ற அடடே பதிலைத் தந்து செய்தியாளர்களை அசத்தினார்  எஸ்.ஏ சந்திரசேகர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,058.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.