Show all

கல்யாணிக்குக் கன்னடத்தில் வாய்ப்பு!

கல்யாணி, தொடர்ந்து மலையாளம், தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயனின் ஹீரோ, சிம்புவின் மாநாடு படங்களில் நடித்துள்ளார். தற்போது கல்யாணிக்குக் கன்னடத்தில் வாய்ப்பு கிட்டியுள்ளது. இதன் மூலம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்த நடிகைகள் பட்டியலில் கல்யாணியும் இணைந்துள்ளார்.

12,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: இயக்குநர் பிரியதர்சன், நடிகை லிசி இணையரின் மகள் கல்யாணி. 'ஹலோ' என்ற தெலுங்குப் படம் மூலம் கதைத் தலைவியாக அறிமுகமானார்.  இவர் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் 7வது தென்னிந்திய பன்னாட்டு திரைப்பட விருது ஆகிய இரண்டு விருதுகளை தான் நடித்த முதல் படத்திற்காகப் பெற்றுள்ளார்.

கல்யாணிக்கு, சித்தார்த் என்கிற உடன்பிறப்பு இருக்கிறார். சென்னை, ஆண்டாள் வெங்கடசுப்பாராவ் பதின்ம மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பினை முடித்தார். பின்னர், மேற்படிப்பை சிங்கப்பூரில் படித்தார். அங்குள்ள நாடகக் குழுவில் பணிபுரிந்தார். தனது பள்ளிப் படிப்பை முடித்தபிறகு, நியூயார்க் நகரத்திலுள்ள பார்சன்ஸ் ஸ்கூல் ஆப் டிசைன் கல்லூரியில் சேர்ந்து கட்டிடக்கலை வடிவமைப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 

கல்யாணி, தொடர்ந்து மலையாளம், தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயனின் ஹீரோ, சிம்புவின் மாநாடு படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் காலடி பதித்து ஐந்தாண்டுகள்  ஆகிவிட்டதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை கல்யாணி, கன்னடத்தில் அறிமுகமாகிறார். பேரறிமுக கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் நடிகர் ராகவேந்திரா ராஜ்குமார். இவர் மகன் யுவ ராஜ்குமார் கதைத்தலைவனாக அறிமுகமாகும் படத்தில் கல்யாணி அவருக்கு இணையராக நடிக்கிறார். இதன் மூலம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்த நடிகைகள் பட்டியலில் கல்யாணியும் இணைந்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,475.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.