Show all

'ஐரா' கூகுள் தேடல் தீயாகி வருகிறது! 'நயன்தாரா மாதிரியே இருக்கும் இந்தப் பெண்ணை ஐரா பாடலில்....' விக்னேஷ் கீச்சுப்பதிவால்

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நயன்தாரா மாதிரியே இருக்கும் இந்தப் பெண்ணை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது, என ஐரா பாடலில் கதைத்தலைவியின்  தோற்றம் குறித்து, விக்னேஷ் சிவன் கீச்சு ஒன்றை வெளியிட, நயன்தாரா ரசிகர்களிடம் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

ஐரா, ஐரா படம், ஐரா கதைத்தலைவி என்ற கூகுள் தேடல் தீயாகி வருகிறது.

உண்மையில் இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ஐரா. இப்படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கலையரசன், யோகிபாபு, ஜே.பீ. ஆகியோர் முதன்;மையமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கே.எஸ். சுந்தரமூர்த்தி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது. இந்த பாடல் சிறப்பாக வந்திருக்கிறது.

இதில் அடையாளமே தெரியாத அளவு ரொம்ப வித்தியாசமான ஒப்பனையில் நயன்தாரா உள்ளார். இதுகுறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள கீச்சுப் பதிவில், 'அருமையான பாடல். கவிஞர் தாமரை ஒவ்வொரு பாட்டிலும் அசர வைக்கிறார். கேஜிஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சர்ஜுனுக்கு என் வாழ்த்துக்கள். நயன்தாரா மாதிரியே இருக்கும் இந்த பெண்ணை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது, என்று வேடிக்கையாக பதிவிட்டு நயன் குறித்து விக்னேஷ் சிவன் பெருமை கொள்ள, நயன்தாரா ரசிகர்களின் லப்டப் துடிப்பு எகிற, ஐரா குறித்த கூகுள் தேடல் தீயானது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,058.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.