Show all

விசால்-அனிசா திருமணஉறுதிப்பாட்டு அலங்காரப் பொறுப்பை தமிழ் ராக்கர்ஸ் எடுத்துக் கொண்டார்களா! விசாலுக்குக் கிடைத்த தலைவலி

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விசாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷா அல்லா ரெட்டிக்கும் நேற்று ஹைதராபாத்தில் திருமண உறுதிப்பாடு நடந்தது. இதில் நண்பர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். 

இது திரையுலக ரசிகர்களுக்கு மிகப் பெரிய செய்திதான். ஏனென்றால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க பொதுச் செயலாளர் என தமிழ் திரை உலகில் மிகப்பெரிய பொறுப்புகளில் நடிகர் விசால் இருந்து வருகின்றார். அதோடு திருட்டுத் தனமாக இணையதளத்தில் திரைப் படங்களை வெளியிட்டு வரும் தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கடுமையாக முயற்சி செய்து வருகின்றார்.

இப்போதைக்கு இந்தச் செய்தியை சிறியதாக்கும் வகையில் இந்த விசாலின் திருமண உறுதிப்பாட்டு நிகழ்ச்சியில் ஒரு நையாண்டிக்கான பிழை நடந்தேறி விட்டது. என்ன அந்த பிழை:

தமிழ் திரைப்படவுக்கு மிகப்பெரிய அறைகூவலாக இருந்து வருகின்றது தமிழ் ராக்கர்ஸ். ஆனால் விசாலின் திருமண உறுதிப்பாட்டு நிகழ்ச்சியில் மணமேடை பின்புற அலங்காரம் தமிழ்ராக்கர்ஸ் இலச்சிணை மாதிரியில் அலங்கரிக்கப்பட்டிருந்ததுதாம் பலரும் விமர்சிக்கும் வகையில் அமைந்துவிட்டது.

இந்நிலையில் தமிழ்ராக்கர்ஸை ஒழிக்க நினைக்கும் விஷாலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழ்ராக்கர்ஸ் பெயரில் இருக்கும் டுவிட்டர் கணக்கில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் பதிவிட்டுள்ளனர்.

தமிழ்ராக்கர்ஸ் பயன்படுத்தி வரும் லோகோவில் உள்ள மாதிரி, விசால் உறுதிப்பாட்டில் பின்னனி அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது குறித்து கிச்சுவில் பலர் கலாய்த்து வருகின்றனர்.

இதுதான் இணையத்தில் இன்றைய தலைப்பாக போகிறது. பாவம் விசாலுக்கு தமிழ்ராக்கர்சால் எந்தக் கோணத்தில் எல்லாம் தலைவலி.

மாதிரிக்கு ஒரு காலாய்ப்பு: 'யார் சார் இந்த தமிழ் ராக்கர்ஸ் எனக்கே பாக்கணும் போல இருக்கு'

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,095.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.