Show all

திமுகவில் ஆறு வாரிசுகள் போட்டி இது சிறப்புச் செய்தி!

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான, திமுகவின் வேட்பாளர் பட்டியலில், வாரிசுகள் ஆறு பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1.மறைந்த முன்னாள் முதல்வர், கருணாநிதியின் மகள் கனிமொழி 2.பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் 3.மறைந்த முன்னாள் நடுவண் அமைச்சர் மாறனின் மகன் தயாநிதி 4.மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கப்பாண்டியன் 5.முன்னாள் அமைச்சர்களான, பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி 6.ஆற்காடு வீராசாமியின் மகன், டாக்டர் கலாநிதி என, வாரிசுகள் ஆறு பேருக்கு, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட திமுகவில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பட்டியலில், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் என, இரு பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பட்டியலில், 13 புதுமுகங்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் போட்டியிட்ட, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், சி.என்.அண்ணாதுரை ஆகிய, ஐந்து பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 

இடைத்தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில், புதுமுக வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியல், கட்சி தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் வெளியிடப்பட்ட, முதல் பட்டியல்.

அதிமுக பொதுச் செயலராக, செயலலிதா இருந்த வரை, எந்த தேர்தலாக இருந்தாலும், முதலில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பணிகளில் இறங்கி விடுவார். அவர், கருத்துப்பரப்புதலைத் தொடங்கும் போது தான், திமுக கூட்டணியையே இறுதி செய்யும். 

செயலலிதா மறைவால், அதிமுகவை, அவரது தோழி சசிகலா முன்னெடுக்க முயன்றார். ஆனால் முயற்சியில் நிறைய சொதல்பல்கள். மக்களின் மனநிலை அறிய பன்னீரை இடைக்கால முதல்வர் ஆக்கி அவரின் பதவி ஆசையைத் தூண்டி விட்டு விட்டு அப்புறம் சசிகலா களம் இறங்க முயன்ற போது, பன்னீர் பாஜகவிடம் அடைக்கலம் ஆனார். அவசர அவசரமாக சசிகலா சிறைக்கு அனுப்பப் பட்டார்

சசிகலா இரண்டாவது தேர்வு எடப்பாடி. பன்னீர் அவரையும் இழுத்து பாஜவிகவிடம் அடைக்கலப்படுத்தி, தினகரனை வெளியேற்றி, தானும் எடப்பாடியும் அதிமுக என்று நிறுவிக் கொண்டார். 

தற்போது முதல்வர், எடப்பாடி - துணை முதல்வர், பன்னீர்செல்வம் இருவரும் அதிமுகவை வழிநடத்தி செல்கின்றனர். செயலலிதா பாணியில், முதலில் வேட்பு மனுவை, அதிமுக பெற்றது. ஆனாலும், கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பட்டியல், வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவது என, அனைத்திலும், திமுக முந்தியது; அதிமுக பின் தங்கியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,095.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.