Show all

தமிழ்ராக்கர்சை ஒரே நாளில் ஒழிக்க விசால் கண்டுபிடித்த மந்திரம்!

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக முதல்வரை நேரில் சந்தித்த பின்னர் தமிழ்ராக்கர்ஸ் ஒழிப்பது குறித்து செய்தியாளர்களுக்கு விசால் பேட்டி அளித்தார்.

இளையராஜா 75 நிகழ்ச்சி சிறப்பாக நடத்த உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்க தலைமை செயலகத்தில் முதல்வரை விசால் நேரில் சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து விசால் பேசியதாவது:

இரண்டொரு மாதங்களில் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா நடைப்பெற வாய்ப்புள்ளது. நாங்கள் முதல்வரிடம் திரைப்படங்கள் வெளியீட்டில் ஆங்கிலப்படங்களை விட தமிழ் படங்களுக்கு முதன்மைத்துவம் வழங்கவும், வரி விதிப்பு விவகாரத்தில் மற்ற மொழி திரைப்படங்களை விட தமிழ் படங்களுக்கு முதன்மைத்துவம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார். 

மேலும் நாங்கள் கடவுளாக பார்க்கும் தமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் தமிழ்ராக்கர்சை ஒழிக்க முடியும். தமிழ் ராக்கர்ஸ் மூலம் புதிய படங்கள் வெளியாவதை அரசு தடுக்க வேண்டும் அதற்கு முடிவு கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,055.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.