Show all

அழகிய தமிழ்ப் பெயர் கொண்ட தென்அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் சிறிய ரக விமானம் கார் மீது தரையிறங்கியதால் பரபரப்பு

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அழகிய தமிழ்ப் பெயர் கொண்ட தென்அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் சிறிய ரக விமானம் கார் மீது தரையிறங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பெரு நாட்டில் சிறிய ரக விமானம் கார் மீது தரையிறங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தலைநகர் லிமாவில் இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதியது. விமானிகளின் சாமர்த்தியத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பரபரப்பான சாலையில் நடைபெற்ற இந்த விபத்தால், அங்கு பதற்றம் நிலவியது.

அது என்ன! தென்அமெரிக்காவில் பெரு என்று அழகிய தமிழ்ப் பெயரில் ஒரு நாடு. பழங்காலத்தில் சோழ இனத்தவர்கள் குடியேறி அந்த நாட்டை வளப்டுத்தியதாக ஒரு வரலாறு பேசப்பட்டு வருகிறது.

தென் அமெரிக்காவின் சோழர்கள் என்பது மீ. மனோகரன் என்பவரால் எழுதப்பட்ட சோழர் மற்றும் தென் அமெரிக்க இன்கா மன்னர்களுக்கும் உள்ள ஒப்புமைகளை ஆய்ந்து சோழர் வழித்தோன்றல்களே இன்கா மக்கள் என்று வாதிடும் தமிழாய்வு நூலாகும். இந்நூலின் படி முதல் மற்றும் இறுதி அத்தியாயங்கள் தவிர்த்து மற்ற ஐந்து அத்தியாயங்களும் சோழர்களும் இன்காக்களும் ஒரே இனத்தவர்களே என்று வரலாற்று ரீதியாக நிறுவ முற்படுகிறது.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,055.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.