Show all

தீயாகும் ஐரா சிறப்புக் காணொளி! படமே வருகிறது நாளை மறுநாள்

வியாழக் கிழமை வெளியாக உள்ள நிலையில் வசனமே இல்லாமல் மிரட்டும் நயன்தாராவின் ஐரா பட சிறப்புக் காணொளி படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ஐரா. லட்சுமி, மா ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். 

நயன்தாரா இந்தப் படத்தில் யமுனா, பவானி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. 

இந்நிலையில் சற்றுமுன்  2 நிமிடம் 48 விநாடிகள் ஓடக்கூடிய புதிய சிறப்புக் காணொளி இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது. 

இந்தப் படத்தின் முதல்காட்சி அதிகாலை 5 மணி காட்சியாக திரையிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,103.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.