Show all

மாற்றுக் கட்சி வேட்பாளர்களை, 'வெற்றி பெறுவோமா' என்று பதற வைக்கும் மீனவப்பெண் காளியம்மாள்! நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளர், மீனவ சமுதாயத்தை சேர்ந்த மீனவப்பெண். மீனவ-பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு எதிராக தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்து வருபவர். அது மட்டுமில்லை. இவர் ஒரு வணிகவியல்இளவல் பட்டதாரி.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளர், மாநில மீனவ பெண் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர். பொதுவாக சீமானின் வேட்பாளர்கள் என்றாலே அதில் ஒரு சிறப்பு இருக்கும் இல்லையா! 

அழுத்தமான கொள்கை அந்த வகையில் காளியம்மாள் அனைவரையும் ஈர்த்தவர். சாமானிய மக்களின் குரலை தனது வெளிப்படை மற்றும் யதார்த்த பேச்சுகளில் வெளிப்படுத்தி வருபவர். எளிமையான தோற்றம்! இயல்பான பேச்சு! தெளிவான உச்சரிப்பு! அழுத்தமான கொள்கை! இதுதான் காளியம்மாள்! 

இவர் பேசும்போது, 'கடலில் தவறும் கடற்படை வீரர்- அவரைக் காப்பாற்றுவது ஒரு மீனவர். இதுதான் நம்ம தமிழ்நாட்டின் தலைவிதி. இந்த கடலில் இறங்கி மீன்பிடிக்கும் எங்களுக்கு மீன்வளத்துறையிலோ கடற்படையிலோ வேலை கிடையாது. ஏன்? எங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா? நாங்கள் எல்லாம் படிக்கவே இல்லையா?' என சுருக் நறுக் கேள்விகளை எழுப்புகிறார். 

இப்போது வடசென்னை வேட்பாளராக அறிமுகமாகி இருக்கும் இவருக்கு பொது மக்களிடம் மவுசு கூடி வருகிறது. 'இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட கடலோரங்களை முறைப்படுத்துதல் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்' என்பதே என்னுடைய முதல் கோரிக்கையாக இருக்கும் என்கிறார் மாற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கும் காளியம்மாள்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,103.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.