Show all

ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான பனிரெண்டாவது ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடரின் ஐந்தாவது போட்டி டெல்லியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக தவான் 51 ரன்கள் குவித்தார். சென்னை அணி சார்பில் பிராவோ 3 விக்கெட்டுகளையும், தீபக் சாகர், ஜடேஜா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணியில் அம்பாதி ராயுடு தவிர மற்ற அனைவரும் சிறப்பாக விளையாடினர். வாட்சன் (44 ரன்) மற்றும் ரெய்னாவின் (30 ரன்) சிறப்பான ஆட்டத்தால் சென்னை அணி பத்து ஒவேர்களிலேயே 97 ரன்கள் குவித்தது. ரெய்னா ஆட்டமிழந்த பிறகு சென்னை அணி மெதுவாக ஆடினாலும், இறுதியாக சென்னை அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் தோனி 32 ரன்களுடனும், பிராவோ 4 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேலும், ஜாதவ் 27 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.  டெல்லி அணி சார்பில் மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா மற்றும் ரபடா தலா  ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். மேலும், டெல்லி அணியின் அக்சார் படேல் நான்கு ஓவருக்கு வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து சிறப்பாக பந்து வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.