Show all

சீமான், சிம்பு, லைகா கூட்டணியில் மூன்று படங்களாம்!

30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிம்புவை வைத்து சீமான் மூன்று படங்கள் இயக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அப்படங்களை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

தொடர்ந்து ரஜினியை விமர்சித்து வரும் சீமான், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் குறித்து காரசாரமாகப் பேசினார். அதோடு, தமிழகத்தின் அடுத்த அதீத மின்மினி சிம்பு தான் என்றும், அவரை வைத்து படங்கள் இயக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

முதலில் இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அந்தத் தகவல் தவறானது என்றும், சீமான் -சிம்பு கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

லைகா தயாரிப்பு என்பதால் இப்படம் பிரம்மாண்டமானதாக உருவாக்கப்படும் என்ற பேச்சும் உள்ளது. அதோடு சிம்புவின் சம்பளமும் இப்படம் மூலம் மேலும் பல கோடிகள் உயர இருக்கிறதாம். சிம்புவை வைத்து சீமான் ஒரு படமல்ல, 3 படங்கள் இயக்க திட்டமிட்டுள்ளாராம். இந்த மூன்று படத்தையுமே லைகாதான் தயாரிக்கிறது என்கிறார்கள். ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் வரை எந்தத் தகவலும் நம்புவதற்கில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,032.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.