Show all

அருமையான அசத்தலான தமிழில் முழங்கும் பேச்சாளர் யார்! இயங்கலை ஊடகம் ஒன்று கருத்துக் கணிப்பு. தமிழிசை கூட போட்டியில்

30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அருமையான அசத்தலான தமிழ் முழக்கத்திற்காகவே, விடிய விடிய காத்திருந்து பேச்சைக் கேட்பதற்காக அன்றைக்கெல்லாம் திமுகவிற்கு கூட்டம் கூடும். அண்ணா, கலைஞர், நாவலர், ஆகியோருக்காக காத்திருப்பது தனி. 

ஒரு முறை இரவு பத்தரை மணிக்கு வந்த கலைஞர், கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் தூங்கி வழிவதைப் பார்த்து, மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, நீங்களோ நித்திரை என்று ஒரு போடு போட்டாரு பாருங்கள். கூட்டத்தினரின் உற்சாக ஒலி வானைப் பிளந்தது.  

மேலும், விடுதலை விரும்பி, வெற்றிகொண்டான், வைகோ, என்று பெரிய பட்டாளமே திமுக பேச்சாளர்களாக அணி வகுத்தது. 

இன்றைக்கு தொலைக்காட்சி விளம்பரத்தில் நரேந்திர மோடி ஜிலேபி, ஹிலேபி, என்று சொல்ல விளையாடு இந்தியா என்று பின்னொலி எப்படியெல்லாம் அல்ல. 

அண்ணா இறந்த போது கலைஞர் வாசித்த கவிதாஞ்சலியில் தமிழகமே அழுதது.

சரி அதுவெல்லாம் இருக்கட்டும்! இயங்கலை ஊடகத்தின் கருத்துக் கணிப்புக்கு வருவோம். நாம்தமிழர் இயக்கத்தின் சீமான் அவர்கள் 35.11விழுக்காடு வாக்குகள் பெற்று அருமையான அசத்தலான தமிழில் முழங்கும் பேச்சாளராக முதல் இடத்தை பெற்றிருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் அவர்கள் 20.84 விழுக்காடு வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

கமல்ஹாசன் அவர்கள் 17.05 விழுக்காடு வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் இருக்கிறார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி அவர்கள் 10.03விழுக்காடு வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்தில் இருக்கிறார். 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் 4.4 விழுக்காடு வாக்குகள் பெற்று ஐந்தாம் இடத்தில் இருக்கிறார்.

ரஜினி, தமிழிசை இருவரும் ஒற்றைப் படை எண்ணிக்கையில் வாக்குகள் பெற்று நோட்டாவிற்கு பிந்தைய இடத்திற்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள். நோட்டா பதினோரு விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,032.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.