Show all

சூடு பிடிக்கிறது தமிழக நடிகர் சங்கத் தேர்தல்! நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டி

ஒவ்வொரு மாநிலத்திற்கும் நடிகர் சங்கம் அமைந்த விட்ட போதும், தமிழகத்தில் இருக்கிற நடிகர் சங்கத்தை இன்னும் தென் இந்திய நடிகர் சங்கம் என்ற பெயரிலேயே அழைத்துக் கொண்டு வருகிற, தமிழக நடிகர் சங்கத்திற்கு இன்னும் இரண்டு கிழமைகளில் நிருவாகிகள் தேர்தல் நடக்க விருக்கிறது.

24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக நடிகர் சங்கத்துக்கு இரண்டு கிழமைகளில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு பதிகை இன்று தொடங்கியது. மனு பதிகை செய்ய திங்கட் கிழமை கடைசி நாள். வரும் வெள்ளிக் கிழமை மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் வெள்ளிக் கிழமை மாலை வெளியாகிறது.

இந்தத் தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கும், விசால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். கார்த்தி பொருளாளர் பதவிக்கு நிற்கிறார். 

தேர்தலில் பாக்யராஜ் களம் இறங்கியிருப்பதால், நடிகர் சங்க தேர்தல் சூடு பிடித்துள்ளது. நடிகர் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிடுகிறார். விசாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார். துணைத் தலைவர்கள் பதவிக்கு குட்டி பத்மினி, நடிகர் உதயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,176.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.