Show all

கருணாஸ் அள்ளி வீசும் வாக்குறுதிகள்! நடிகர் சங்க தேர்தலில் விசால் அணிக்கு வாக்கு சேகரிப்பு கருத்துப் பரப்புதலில்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் நடிகர் சங்கம் அமைந்த விட்ட போதும், தமிழகத்தில் இருக்கிற நடிகர் சங்கத்தை இன்னும் தென் இந்திய நடிகர் சங்கம் என்ற பெயரிலேயே அழைத்துக் கொண்டு வருகிற, தமிழக நடிகர் சங்கத்திற்கு இன்னும் இரண்டு கிழமைகளில் நிருவாகிகள் தேர்தல் நடக்க விருக்கிறது.

24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்னும் இரண்டு கிழமைகளில் நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது. இதில், தலைவர் பொறுப்புக்கு நாசர், பொதுச்செயலாளர் பொறுப்புக்கு விசால், பொருளாளர் பொறுப்புக்கு கார்த்தி, துணைத்தலைவர் பொறுப்புக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் ஒரு அணியில் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

இதனை முன்னிட்டு மாவட்டந்தோறும் நடிகர் சங்க, நடப்பு நிர்வாகிகள் நாடக நடிகர்களைச் சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இதன்படி சேலம் கல்லாங்குத்து பகுதியில் உள்ள சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்க கட்டிடத்தில், தமிழக நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரும், நடிகருமான கருணாஸ் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கருணாஸ் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி வருவதாகவும், 42 மாதங்களுக்குள் அனைத்து வாக்குறுதிகளையும் 99 விழுக்காடு நிறைவேற்றி இருப்பதாகவும் தெரிவித்த அவர் நடிகர் சங்கத்திற்காக கட்டப்பட்டுவரும் புதிய கட்டிடத்தை விரைந்து கட்டி முடிக்க உள்ளதால் நிச்சயமாக மனசாட்சி உள்ளவர்கள் தங்கள் அணிக்கே வாக்களிப்பார்கள் என தெரிவித்த அவர் இந்த தேர்தலில் தங்கள் அணிக்கே வெற்றி உறுதி என தெரிவித்தார்.

நடிகர் சங்க கட்டிடத்தை விரைந்து கட்டி முடிக்க கார்த்தி ரூ.1 கோடி, விசால் ரூ.25 லட்சம் நிதியுதவி! வழங்கியிருப்பதாகவும்,

மேலும், நலிவடைந்த நாடக நடிகர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதனை மேற்கொண்டு தொடர தங்கள் அணியை மீண்டும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கருத்துப் பரப்புதல் செய்து வருகிறார்.

தொடர்ந்து, 'நலிவடைந்த உறுப்பினர்களுக்கு 3 சென்ட் நிலம் கொடுப்பதாக கூறியிருந்தேன். அதனை கண்டிப்பாக நான் வழங்குவேன். அதே போன்று அகவையான நடிகர்களுக்கு முதியோர் இல்லம் கட்டித்தருவதாகவும் சொல்லியிருந்தேன். அதற்காக திண்டுக்கல்லில் எனக்கு சொந்தமாக உள்ள 5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுக்கிறேன். நான் கொடுக்கும் நிலத்தில், நாடக நடிகர்கள், முதியோர் இல்லம் கட்டுவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்' என்று கருணாஸ் கூறியுள்ளார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,176.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.