Show all

கட்சிக்கு ரோஜாவிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லையோ! ஆனால், ரோஜாவுக்கு கட்சியில் நிறைய எதிர்பார்ப்பு இருந்ததே.

இன்று காலை 25 பேர்கள் கொண்ட ஆந்திர அமைச்சரவை பொறுப்பேற்கிறது. ஆறு முதல்வர்கள். ஆறுதல் அளிக்கும் வகையாக ரோஜாவுக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப் படவில்லை. கட்சியில் ரோஜா மூத்தவர் மற்றும் பிரபலமானவர். அதனால் ரோஜாவுக்கும் கட்சி வட்டாரத்திற்கும் நிறைய ஏதிர்பார்ப்பு இருந்தது.

25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ரோஜாவுக்கு துணை முதல்வர் பொறுப்பு என்று ஊடகங்கள் ரோஜாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி, மீண்டும் மீண்டும் அறிவித்த நிலையில்,  இன்று காலை நடைபெறும் விழாவில் 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. இதனை முன்னிட்டு வெளியாகியுள்ள அமைச்சர்களின் பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஜாவுக்கு எந்தப் பொறுப்பும் தரப்படவில்லை.

ஆந்திரா மாநில சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகியுள்ளார். அவரது அமைச்சரவையில் நடிகை ரோஜாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. ரோஜா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இணைந்தார். ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக பல போராட்டங்களில் முன் நின்றார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆந்திர மாநில அமைச்சரவையில் நடிகை ரோஜாவுக்கு இடமில்லை. 

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் கட்சியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்ட முதன்மைத் தலைவர்களில் ஒருவரான ரோஜாவுக்கு அமைச்சரவையில் ஒரு துறையும் கொடுக்கப்படவில்லை. 

அனுபவம் மிக்கவரும் கட்சியாக போராடியவருமான ரோஜாவுக்கு ஜெகன்மோகன் அமைச்சரவையில் உரிய அங்கீகாரம் கிடைக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. ஆனால், விரைவில் அவருக்கு கட்சியை வழிநடத்துவதில் முதன்மை பொறுப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சு தற்போது வெளியாகி வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,177.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.