Show all

மொக்கையான கெத்து காட்சிகளுடன் நடித்து, வீழ்ந்து வருகிறார் சிம்பு! தற்போதே பிரபுவுக்கு இணையாக கூடும் எடைவேறு

25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் தொலைக்காட்சியில், நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்த சந்தானத்தை நடிகர் சிம்புதான் தனது படத்தில் அறிமுகம் செய்தார். 

ஆனால் தற்போது சிம்புவின் படத்தை காலி செய்யும் அளவுக்கு சந்தானம் வளர்ந்துவிட்டது சிம்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வெள்ளியன்று வெளியானது. அதிகாலை காட்சிகள், பாலாபிசேகம் என சிறப்பாக வெளியீடு ஆன இந்த படம் கெட்ட விமர்சனம் காரணமாக 90 விழுக்காடு திரையரங்குகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமையுடன் தூக்கப்பட்டு மீண்டும் பேட்ட மற்றும் விஸ்வாசம் திரையிடப்பட்டன.

இந்த நிலையில் மீதி 10விழுக்காடு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த சிம்பு படத்தை இன்று வெளியான சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2' காலி செய்துவிட்டதாகவும், தற்போது 'வந்தா ராஜாவாதான்' வருவேன்' திரைப்படம் காலி ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. சிம்புவுடன் திரையுலகிற்கு வந்த நடிகர்கள் இன்னும் குழைவாகவும், ஒவ்வொரு படத்திலும் நடிப்பை மெருகேற்றியும் வரும் நிலையில் சிம்பு தற்போதே பிரபுவுக்கு இணையாக எடை கூடிவிட்டதோடு மொக்கையான கெத்து காட்சிகளுடன் நடித்து வருவதே அவரது வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,056.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.