Show all

வளரும் ஜியோ; கடனில் திவாலானது அனில் அம்பானியின் ரிலையன்ஸ்! அண்ணன் என்னடா தம்பி என்னடா, மோடி ஆளுகின்ற நாட்டிலே

25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் கடனை திருப்பி செலுத்த முடியாததால் திவால் ஆகிறது.  இதனால்  தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சொத்தை விற்று அதன் மூலம் கடன்களை அடைக்க முயன்றது. ஆனால், மொத்த கடன் தீர்மான நடைமுறை எந்த முன்னேற்றத்தையும் அடையாததால் திவால் என அறிவித்துள்ளது. 

கடந்த 12 மாதங்களில் 40 கடனாளர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அறங்கூற்று மன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தொலைத்தொடர்பு நிறுவனம் கூறியுள்ளது. 

7 பில்லியன் டாலர் வங்கிகளிடமிருந்து கடனாக வாங்கியுள்ளது. கடனில் மிகவும் தத்தளித்து வந்த இந்த நிறுவனம் விலை உயர்வு மற்றும் ஜியோ வருகைக்கு பின் இதன் நட்டம் அதிகமாகியுள்ளது. ஜியோ நிறுவனம் அனில் அம்பானியின்  அண்ணன் முகேஷ் அம்பானியின் நிறுவனமாகும்.

    -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,056.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.