Show all

ஏஆர் முருகதாசை தேடி வந்த மேற்கத்திய திரையுலகம்! அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனம் எழுதிட

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜினி, துப்பாக்கி, சர்கார் என வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, பல விருதுகளை பெற்று திரையுலக முடிசூடா மன்னனாக திகழ்பவர் ஏஆர் முருகதாஸ்.

ஏஆர் முருகதாசுக்கு தற்போது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனத்தை எழுதும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.

இதுகுறித்து அவெஞ்சர்ஸ் படத்தில் தயாரிப்பு நிறுவனமான மார்வல் ஸ்டூடியோஸ் இந்தியா, பல விருது வென்ற இயக்குனரும், திரைக்கதை, வசனம் எழுதக்கூடிய முருகதாஸ், இந்திய உள்ளூர் மொழியான தமிழ் பதிப்பில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என தெரிவித்துள்ளது.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தை அந்தோனி மற்றும் ஜோ ருசோ ஆகியோர் இயக்கி உள்ளனர். தி அவெஞ்சர்ஸ், அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆப் அல்ட்ரான், அவெஞ்சர்ஸ்: இன்பினிடி வார் ஆகிய படங்கள் அவெஞ்சர்ஸ் வரிசையில் வெளியீடு ஆகியுள்ளன. தற்போது உருவாகியுள்ள அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படம் வரும் 13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121 (26.04.2019) அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மார்வல் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் கடந்த ஆண்டு முதன் முதலாக அயன் மேன் படத்தை தயாரித்தது. மேலும் தான் உருவாக்கும் பல படங்களை தமிழ் பதிப்பாக வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,064.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.