Show all

வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் இந்திய மக்கள்! மோடியின் 4.5 ஆண்டுகால விளம்பரம், வெளிநாட்டுப் பயணச் செலவுகளைக் கேட்டு

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் விளம்பரத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளது. கடந்த 4.5 ஆண்டுகளில் இதுவரை ரூ.4,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தெரியவந்துள்ளது.

பிரபலதொலைக்காட்சி ஒளிபரப்புகளில், ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மோடி அரசின் விளம்பரங்கள் வெளியாகின்றன. மோடி தலைமையிலான அரசு மக்களின் வரிப்பணத்தை விளம்பரத்துக்காக தண்ணீர் போல் செலவு செய்வது சமூக ஊடகங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தின, எதிர்க்கட்சிகள் கண்டித்தன. மக்களுக்காக ஒரு ஆணியும் பிடுங்காத அரசுக்கு எதற்கு விளம்பரங்கள் என்று மக்களும் நொந்து கொண்டார்கள்.

இந்த நிலையில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்று 4.5 ஆண்டுகளில் விளம்பரத்துக்காக எத்தனை கோடி பணம் செலவு செய்துள்ளது என்பதை அறிய அரசு அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுள்ளார்.

இவர் கோரிய தகவல்களுக்குத் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தகவல் விளம்பரப் பிரிவு பதில்களை வழங்கியுள்ளது. அதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்னணு ஊடகங்களின் வாயிலான விளம்பரத்துக்கு ரூ.2,374 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், வெளி விளம்பரங்களுக்கு ரூ.670 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மின்னணு ஊடகங்களைப் பொறுத்தவரையில் சமூக ஊடக தளங்கள், தொலைக்காட்சிகள், வானொலி வழியான செலவுகளே முதன்மைப் பங்கு வகிக்கின்றன.

கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் மோடியின் வெளிநாட்டு பயணம் மற்றும் விளம்பர செலவு பற்றி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நடுவண் அமைச்சர்கள் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளனர். அதில் கடந்த 4.5 ஆண்டுகளில் 84 முறை மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2,013.76 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் கூறியுள்ளார். 

விளம்பரப்படுத்துவதற்காக ரூ.4,602.88 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மற்றொரு நடுவண் அமைச்சர் ராஜவர்தன ரத்தூர் கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,064.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.