Show all

சமந்தா, நயன்தாரா, திரிஷாவைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு கதைத்தலைவியாகிறார் ஸ்ருதிஹாசன்

19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தற்போது '96' திரைப்படம் வெளியாகி, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இவருக்கு கதைத்தலைவியாக திரிஷா நடித்திருக்கிறார்.

மேலும், நயன்தாராவுடன் நானும் ரவுடிதான், இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தார். சமந்தாவுடன் இணைந்து சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக, பிரபல நடிகையுடன் சேர்ந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு கதைத்தலைவியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,931.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.