Show all

இரண்டு கிழமைகளாகத் தப்பித்து வந்த சாக்சி! இந்தக் கிழமை உறுதியாக வெளியேறுகிறார் பிக்பாஸ் வீட்டிலிருந்து.

கடந்த இரண்டு கிழமைகளாக தப்பித்து வந்த சாக்சி, இந்த கிழமை மிக மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்று  உறுதியாக வெளியேறுகிறார் என்பதாக, பெரும்பான்மை கருத்துக் கணிப்புகளில் தெரிய வருகின்றன.

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பவர் சாக்சி என்பதாகவே கருதப்படுகிறது. தொடக்கத்தில் இருந்தே யாராவது ஏதாவது பேசினால் அதனை ஒட்டுக்கேட்டுவிட்டு அரைகுறையாக பேசி பிரச்சனையாக்குவது சாக்சிக்கு கை வந்த கலை. முகென் மீராவிடம் பேசியதை ஒட்டுக்கேட்டு விட்டு உள்ளே போய் கொளுத்தி போட்டார். மதுமிதா விசயத்திலும் பயங்கரமாக பேசி சண்டைபோட்டார் சாக்சி. பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரைப் பற்றியும் பின்னால் பேசியிருக்கிறார் சாக்சி. 

கிழமைதோறும் சாக்சி வெளியேற்றப் பட்டியலுக்கு வந்து விடுகிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு காரணத்தால் அவர் இதுவரை காப்பாற்றப்பட்டு வந்தார். மீரா, சேரன் மீது புகார் கூறி வெளியேறிவிட்டார். மீரா சேரன் மீது அப்படி ஒரு புகாரை கூறாமல் இருந்திருந்தால் உறுதியாக அந்த கிழமையே சாக்சி வெளியேற்றப்பட்டிருப்பார். ஆனால், சாக்சி தப்பித்துவிட்டார். கடந்த கிழமையும் சாக்சிதான் வெளியே போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரேஷ்மா வெளியேறிவிட்டார். சேரனை தவறாகப் பேசியதால் ரேஷ்மாவுக்கு கிழமையின் இறுதியில் வாக்குகள் குறைந்தன. இதனால் தப்பித்தார் சாக்சி. 

இந்தக் கிழமை வெளியேற்றப் போட்டியில் மிகமிக அதிக வாக்குகள் பெற்று லாஸ்லியா பாதுகாக்கப் படுகிறார்; மேலும் முன்னோட்டக் காணொளியிலும் லாஸ்லியா பாதுகாக்கப் படுகிறார் என்கிற சேதியைக் கமல் தெரிவிக்கிறார். அபிராமி நடுநிலையான வாக்குகள் பெற்று பார்வையாளர்கள் பாதுகாப்பைப் பெறுகிறார்.  சாக்சியே மிக மிகக் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட விருக்கிறார்.

இருப்பினும், பிக்பாஸ்  நிகழ்ச்சியில் ரகசிய அறையில் வைத்திருப்பதன் மூலம் நிகழ்ச்சியில் தனது பயணத்தைத் தொடர  சாக்சிஅகர்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று பார்வையாளர்கள் நடுவே  நம்பிக்கை உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,241.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.