Show all

ரஜினியின் 2ஓ படத்தையும் வெளியீட்டு நாளிலேயே இணையத்தில் வெளியிடுவோம்! தமிழ் ராக்கர்ஸ் அறிவிப்பு

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்கார் படத்தை வெளியீட்டு நாளிலேயே இணையத்தில் வெளியிட்டது போல ரஜினிகாந்த் நடித்த 2ஓ படத்தையும் இணைய வெளியீடு செய்வோம் என்று தமிழ் ராக்கர்ஸ் தனது கீச்சுப் பக்கத்தில் அறிவித்துள்ளது. 

தமிழ்த் திரையுலகினருக்கு மிகப் பெரிய சவாலாக தமிழ் ராக்கர்ஸ் திகழ்கிறது. எந்தப் படம் வந்தாலும் சரி சில மணி நேரங்களில் அதன் புத்தம் புது நகலை இணையத்தில் வெளியிட்டு விடுகின்றனர். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விசாலும் பலமுறை சவால் விட்டு விட்டார். ஆனாலும் தமிழ் ராக்கர்ஸ் விட்டுக் கொடுப்பதாக இல்லை. இந்த நிலையில் அண்மையில் சர்கார் படத்தை இணையத்தில்  வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அதுவும் சொல்லி வைத்து அதை வெளியிட்டனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள பிரமாண்டப் படமான 2ஓ படத்தையும் வெளியீட்டு நாளிலேயே இணையத்தில் வெளியிடப் போவதாக தமிழ் ராக்கர்ஸ் கீச்சு போட்டுள்ளது. இதனால் தமிழ்த் திரையுலகில் பரபரப்பு கிளம்பியுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,966. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.