Show all

நள்ளிரவில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நள்ளிரவில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து பொங்கலுக்கு  ஒன்பது நாட்களுக்கு முன்பு (05/01/2019) தேர்தல் நடைபெறும் என இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.
இலங்கையில் அதிபர் சிறிசேனா, அதிரடியாக ரனில் விக்ரம சிங்கேயை நீக்கி விட்டு, ராஜபக்சேயை தலைமை அமைச்சராக நியமித்தார்.
இருப்பினும் நாடாளுமன்றத்தை கூட்டி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

நாடாளுமன்றத்தை  முடக்கி வைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். இதற்கிடையே, பாராளுமன்றம் புதன் அன்று  கூட இருந்த நிலையில், நேற்று இரவு பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். நள்ளிரவு முதல் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும் அதிபர் சிறிசேனா அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து பொங்கலுக்கு  ஒன்பது நாட்களுக்கு முன்பு (05/01/2019) தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய நாடாளுமன்றம் பொங்கல் முடிந்து 17.01.2019இல் பதவியேற்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,967.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.