Show all

தினகரன் முன்னேற்றமும், எடப்பாடி- பன்னீர் பின்னடைவுகளும்

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக மற்றும் தமிழக அறிவாளிகளின் பேச்சைக் கேட்டு, செயலலிதா அவர்களின் உயிர்த்தோழி சசிகலாவைப் புறந்தள்ளியது மிகப் பெருந்தவறு என்பதை அதிமுகவில் அனைத்து தரப்பினரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். 

தமிழக மக்கள் சசிகலாவையும், சசிகலாவைச் சார்ந்தவர்களையும், அங்கரிக்கமாட்டார்கள் என்ற உயரிய அறிவாளித்தனமான கருத்தை நம்பி பாஜகவிற்கு அடிமையாகிப் போனவர்கள்தாம் பன்னீரும், பன்னீரால் எடப்பாடியும்.

தினகரன்கூட அவர்களோடு சேர்ந்து, உண்மைதானோ என்று சசிகலாவைச் சார்ந்திருக்க கூச்சப் பட்டவர்தான். செயலலிதாவை நடுவண் அரசின் வழக்குகளோடுதான், தமிழக மக்கள் அங்கிகரித்தார்கள். நாற்பதும் நமதே என்று செயலலிதா அவர்கள் கேட்ட போது, கொடுத்தவர்கள்தான் தமிழக மக்கள். தமிழக மக்கள். தமிழக மக்களைப் பொறுத்த வரை, சொத்துக் குவிப்பு என்கிற அறிவாளித்தனமான வழக்கை கேணத்தனமானதாகவே கருதினார்கள். அப்புறம் எப்படி சசிகலாவோடு சேர்ந்ததால்தான் செயலலிதா குற்றவாளியாக்கப் பட்டார் என்கிற குறுக்கு புத்தியை எல்லாம் அங்கிகரிப்பார்கள். 

பாஜக, திமுக சூழ்ச்சிக்கு, சசிகலாவை பலியாடாக்கியது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் என்பதை அதிமுகவின் அனைத்துத் தரப்பினரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். தினகரன் இப்போதுதான் துணிச்சலாகக் களம் கண்டிருக்கிறார். 

பெங்களூர் பரப்பன அக்கிரகார சிறையில் உள்ள சசிகலாவை  தினகரன் இன்று நேரில் சந்தித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக முதல்முறையாக நீக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரும் அவருடன் பெங்களூர் சென்றனர்.

அதில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக நாங்கள் பேசினோம். மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று நாங்கள் எடுத்த முடிவு சரியானது என்று சசிகலா கூறினார். இடைத்தேர்தலைச் சந்திப்பது சரி தான், தைரியமாக தேர்தலில் போட்டியிடுங்கள் என சசிகலா கூறினார். 20 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திப்பது நல்ல முடிவு என சசிகலா கூறினார். என்று தினகரன் சசிகலா அவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வதை வெளிப்படையாகத் தெரிவித்து தனது கூச்சத்திலிருந்து வெளி வந்திருக்கிறார்.

இப்படி தினகரன் சிறப்பாக காய் நகர்த்தி வரும் வேளையில், எடப்பாடி, பன்னீர் அணியினர் கேவலம் திரைப்படக் கருத்துக்கு எதிராக போராடி பேரைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சர்கார் படக்கருத்துக்களைப் போல பல்லாயிரம் கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்து அரசியலுக்கு வந்து தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் எம்ஜியார். எம்ஜியார் வழி என்று கருதிக் கொண்டுதான் இப்படியெல்லாம் தமிழில் திரைப்படங்கள் எடுக்கப் படுகின்றன. மீண்டும் மீண்டும் தவறுகளையே செய்து தமிழக மக்களிடம் இருந்து நூறு விழுக்காடும் அன்னியப் பட்டு விடவேண்டாம் எடப்பாடி, பன்னீர் அவர்களே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,966.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.