Show all

கட்சி அறிவிப்புக்கு பெப்பே! மேலும் 2 படங்களில் நடிக்கும் ரஜினிகாந்த்

10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினிகாந்த் கடந்த ஆண்டு இதே தருணம்; சென்னையில் விசிறிகளை கூட்டி அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்ததும் 2 மாதங்களில் கட்சி பெயரை அறிவித்து விடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் தொடர்ந்து கபாலி, காலா, 2.0 படங்களில் நடித்தார். அதன்பிறகு பேட்ட படத்திலும் நடித்து விட்டார். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

இனிமேல் திரைப்படத்திற்கு முழுக்கு போட்டு கட்சிபெயரை அறிவித்து விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் இரு படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவற்றில் ஒரு படத்தை ஏ.ஆர்.முருகதாசும் இன்னொரு படத்தை வினோத்தும் இயக்குவதாகக் கூறப்படுகிறது.  முருகதாஸ் படம் லஞ்சம் ஊழலுக்கு எதிரான கதையம்சம் கொண்டது. முதல்வன் படம் பாணியில் முருகதாஸ் நடையில் திரைக்கதை இருக்கும் என்கின்றனர். ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் இதில் நடிக்கிறார். இயக்குநர் வினோத் சதுரங்க வேட்டை படம் எடுத்து பிரபலமானவர். 

இப்போது அஜித் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகிறது. வினோத் சொன்ன ஒரு கதை ரஜினிக்கு பிடித்து விட்டதாகவும் அதன் திரைக்கதையை மேலும் நன்றாக செதுக்கும்படி அவர் அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து தனுசும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த 2 படங்களையும் முடித்த பிறகே கட்சி பெயரை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இல்லை நிரந்தரமாகவே கட்சிக்கு பெப்பேவா என்றும் தெரியவில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,012.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.