Show all

குற்றவாளிகளை ஈவுஇரக்கமின்றி சுட்டு கொல்லுங்கள்! உணர்ச்சி வசப்பட்டு, பின்னர் தெளிவு படுத்திய கர்நாடக முதல்வர் குமாரசாமி

10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகாவில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாண்டியா பகுதி நிர்வாகியாக இருந்தவர் பிரகாஷ். இவர் நேற்று மாலை தனது காரில் சென்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மர்மநபர்கள், அவரை காரை விட்டு வலுக்கட்டாயமாக இறக்கி அடித்து கொலை செய்தனர். பின்னர், அந்த காரிலேயே, அந்தச் சடலத்தை போட்டுவிட்டு, அந்த கும்பல் தப்பி சென்றுவிட்டது. விஜயாபுரம் பகுதிக்கு வந்த முதல்வர் குமாரசாமியிடம், பிரகாஷ் கொலை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

அப்போது முதல்வர் குமாரசாமி, செல்பேசியில் யாரிடமோ இந்த கொலை பெரும் கவலை அளிக்கிறது. பிரகாஷ் நல்ல மனிதர். ஏன் கொலை செய்யப்பட்டார் என தெரியவில்லை. குற்றவாளிகளை ஈவுஇரக்கமின்றி சுட்டு கொல்லுங்கள். இதனால் பிரச்னையில்லை எனக்கூறினார். இதனை அங்கிருந்த சிலர் தங்;கள் செல்பேசியில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது வேகமாக பரவ துவங்கியதால், சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசியது! கொலைகாரர்கள், 2 கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள். சிறையில் இருந்த அவர்கள், 2 நாட்களுக்கு முன்னர் தான் பிணையில் வந்து, எங்கள் கட்சி நிர்வாகியை கொலை செய்தனர். அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் அந்த உணர்ச்சி மற்றபடி குற்றவாளிகளை ஈவுஇரக்கமின்றி சுட்டு கொல்லுங்கள் என்று உத்தரவு எல்லாம் இடவில்லை என்று செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார் முதல்வர் குமாரசாமி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,012.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.