Show all

தெலுங்கில் திரைப்படமாகும் ஏழுநாடுகளுடன் பிரபாகரன் நிகழ்த்திய ஈழப்போர்

தமிழீழ மக்களின் தலைவர் பிரபாகரனையும் அவர் நடத்திய போர்களையும் மையமாக்கி தமிழில் சில திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அவை தமிழ் ஈழ அரசியல் செயல்பாட்டில் ஆர்வமுள்ள, ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறையுள்ள கலைத்துறையினரின் உணர்வு வெளிப்பாடாகக் கருதப்பட்டது. தமிழில் இப்படியான முயற்சிகள் வழக்கமானவை.

ஆனால் தெலுங்கில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து திரைப்படங்கள் வெளிவருவது அரிது. 10 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘சத்ரபதிதிரைப்படத்தில் அம்மா அன்புணர்ச்சி காட்சிகள் சில,

இலங்கையிலிருந்து போரில் தப்பி வரும் அகதிப் பிரச்சினையைத் லேசாகத் தொட்டு வெளிவந்தது. அவ்வளவு தான் அதற்குப் பின் அங்கே இலங்கைப் பிரச்சினை குறித்த திரைப்படங்கள் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

தற்போது நடிகர் மோகன் பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஒக்கடு மிகிலடுதிரைப்படம் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரை மையமாக வைத்து வெளிவர இருப்பதாக செய்திகள் கசிகின்றன. அதுமட்டுமல்ல அத்திரைப்படத்தில் மஞ்சு மனோஜ் புலித்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வேடமேற்று நடிக்கவிருப்பதாகவும் கூடத் தகவல்!

ஒக்கடு மிகிலடு எனும் தெலுங்கு சொற்களுக்கான பொருள்; ‘எவனும் மிஞ்சப்போவதில்லைஎன்பதே.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை மிக உணர்வுப் பூர்வமான அரசியல் போராட்டங்களில் ஒன்றான இலங்கை உள்நாட்டுப் போரை மையமாக்கி வெளிவரும் இத்திரைப்படம் வழக்கமாகப் புறக்கணிக்கப்படும்-

மசாலா தூக்கலான தெலுங்கு அதிரடி திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு உண்மையாகவே இலங்கை உள்நாட்டுப் போரை உள்ளது உள்ளபடி உணர்வு பூர்வமாக வெளிக்கொண்டு வருமா? என்பது படம் வெளிவந்தால் தெரியும்.

தமிழில்,

நான் திரும்ப வருவேன்என்ற பெயரில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

தமிழில் வசனம் மற்றும் பாடல்களை சுரேஷ் ஜித்தன் எழுதியிருக்கிறார். செப்டம்பர் மாதம் தெலுங்கில் வெளியாகும்போதே தமிழிலும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.

இந்தப் படத்தின் சுவரொட்டிகளில் புலிகள் இயக்கத்தின் இலச்சினை சாயல் இருக்கிறது. பிரபாகரனின் தொடக்க கால வாழ்க்கையையும், புலிகள் இயக்கத்தைப் பற்றியும் எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பிரபாகரனைத் தவறாக சித்தரிப்பதைப் போல இருந்தால் தமிழில் வெளிவருவதில் சிக்கல் ஏற்படலாம் என திரைத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.