Show all

பாஜக ஆளும் மகாராஷ்டிராவிலும் மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 55 குழந்தைகள் பலியாம்

மகாராஷ்டிராவில், காற்றோட்டம் இன்மை, உயிர்வளி உருளை பற்றாக்குறையால் ஒரு மாதத்தில் 55 குழந்தைகள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி., மாநிலம் கோரக்பூரில் கடந்த ஓர் ஆண்டில் உயிர்வளி உருளை பற்றாக்குறையால் 1317 குழந்தைகள் பலியான சம்பவம் உலகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்ட மருத்துவமனையில் காற்றோட்டம் இன்மை, உயிர்வளி உருளை பற்றாக்குறை, மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தினால், இங்கு அனுமதிக்கப்பட்ட 350 குழந்தைகளில் 55 குழந்தைகள் இறந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஜிஎம் ஹோலே கூறுகையில், கடந்த ஆகஸ்ட் மாதம், காற்றோட்டம் இன்மை காரணத்தினால் 55 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. 21 படுக்கைகள், புதிய பிரசவ வார்டு அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. இதனை அமைப்பதற்கு, அங்குள்ள மரம் ஒன்று இடையூறாக உள்ளது. இதனை அகற்ற தற்போது வரை அனுமதி கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறுகிறார்.

கடந்த 5 மாதங்களில் மட்டும் 187 குழந்தைகள் இந்த மருத்துவமனையில் உயிரிழந்துள்ளன.

மகாராஷ்டிர பாஜக முதல்வர் பட்நாவீஸ் கூறுகையில்,

இந்தச் சம்பவத்தை கோரக்பூர் சம்பவத்துடன் தொடர்புபடுத்துவது சரியல்ல. குழந்தைகள் இறப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். கடந்த வருடம் அதிக குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு குழந்தைகள் இறப்பு குறைந்துள்ளது.

என்று பெருமை பட்டுக் கொள்கிறார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் மருத்துவ வசதி இன்மை, பிறந்த குழந்தைகள் மரணம் என்று உலகமே அதிர்வலைகளில் மூழ்கியிருக்கும் நிலையில் நாங்கள் தாம் நீட் தேர்வு வைப்போம்; நாங்கள்தாம் மருத்துவத்திற்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்போம் என்று உச்ச அறங்கூற்று மன்றத்தை வைத்து அடாவடி செய்து கொண்டிருக்கிறது நடுவண் அரசு.

இங்கே ஒரு பாஜக தலைவி தமிழிசை என்று பெயர் வைத்த அப்பன் பெயரைக் கெடுக்க சூரியாவுக்கு நீட் பற்றி என்ன தெரியும்? ஸ்டாலின் என்னோடு நீட் எழுத அணியமா! என்றெல்லாம் அல்லாடிக் கொண்டிருக்கிறது. போக வேண்டியது தானே உபிக்கும், மகாராட்டிராவுக்கும்; இங்கே ஏன் கழுத்தறுத்துக் கொண்டிருக்கிறது என்கின்றனர் இணைய ஆர்வலர்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.