Show all

ஆதாருடன் இணைக்காத செல்பேசி செறிவட்டைகள் பிப். 2018க்கு பிறகு செயலிழந்து விடும்

செல்பேசி எண்ணுடன் ஆதார் எண் இணைக்காத செறிவட்டைகள் வரும் 2018ஆம் ஆண்டு பிப்ரவரிக்குள் செயலிழப்பு செய்யப்படும் என நடுவண் அரசு அறிவித்துள்ளது.

நடுவண் அரசின் நலத்திட்ட உதவிகள் (இதுவரை எதுவும் வழங்க இல்லை), எரிவாயு மானியம் (விரைவில் ரத்து செய்யப் படவுள்ளது), வங்கி கணக்குகள் (மக்கள் வருமானத்தைக் கண்காணிக்க மட்டும் பயன் பட்டிருக்கிறது), சத்துணவு பெற, ஓட்டுநர் உரிமம் பெற என ஆதார் பல்வேறு விசயங்களுக்கு தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செல்பேசி எண்ணுடன் ஆதார் எண் இணைக்காத செறிவட்டைகள் வரும் 2018ஆம் ஆண்டு பிப்ரவரிக்கு பின் செயலிழப்பு செய்யப்படும் என நடுவண் அரசு இன்று அறிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச அறங்கூற்றுமன்றம் வழிகாட்டுதலின் படி செறிவட்டைகள் செயலிழப்பு செய்யப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நடுவண் அரசின் நலத்திட்ட உதவிகள், மற்றும் கருப்புப் பணத்தைக் கைப்பற்றிய வகையில் ஒவ்வொரு கணக்கிற்கும் மோடி அரசு வழங்க வேண்டிய தொகை ரூ15,00,000 எப்போது வழங்கப் படும் என்ற தகவல் எதுவும் இன்னும் தெரிவிக்கப் படவில்லை; 2019 தேர்தல் வரை மோடி அரசுக்கு கால அவகாசம்; வழங்காவிட்டால் 2019 தேர்தலில் மோடி அரசு செயலிழப்பு செய்யப்படும் என்கிறார்கள் மக்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.