Show all

பார்த்திபன்-சீதா மகளுக்கு, எம்ஆர்ஆர்.வாசுவின் பேரனுடன் திருமண உறுதிப்பாடு.

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் பார்த்திபன்-நடிகை சீதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது 29 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கதை. இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என இரு மகள்களும், ராக்கி என்ற மகனும் உள்ளனர். பார்த்திபன்-சீதா மனகசப்பு காரணமாக சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.

இவர்களில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்த கீர்த்தனாவுக்கு கடந்தாண்டு திருமணம் ஆனது. இந்நிலையில் அபிநயாவுக்கும் சென்னையை சேர்ந்த நரேஷ் கார்த்திக் என்பவருக்கும் திருமண உறுதிப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அபிநயாவுக்கு உறுதிப்பாடு செய்யப்பட்டுள்ள நரேஷ் கார்த்திக் மறைந்த எம்.ஆர்.ராதாவின் மகன் வாசுவின் மகள் சத்யா ஜெயசந்திரனின் மகன் ஆவார்.

என் மகள் அபிநயா என் அருகிலேயே இருக்க விரும்பியதால் வெளிநாட்டு வரன்களை தவிர்த்து வந்தோம். தற்போது சென்னையிலேயே மாப்பிள்ளை அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை தற்போது கொடுத்து வருகின்றோம். என தெரிவித்துள்ளார் அம்மா சீதா. திருமணத்திற்கு இன்னும் இரண்டு கிழமைகள் உள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,059.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.