Show all

இருபிள்ளைகள் நஞ்சறுந்தி இறந்து போன வேதனை! தமிழகத்தின் சாதனைப் பள்ளியில் நமது பிள்ளைகள் என்று மகிழ்ந்திருந்த வேளையில்

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கும்பகோணம் கல்வி மாவட்டத்தில், அரசு உதவிபெறும் கொட்டையூர் வள்ளலார் பள்ளியில் படித்து தேர்வெழுதிய 108 பேரும் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற சாதனைப் பள்ளி. 

இந்தப் பள்ளியில் தங்கள் பிள்ளைகள் படிப்பதில் பெருமை கொண்டிருந்த பெற்றோர்: கும்பகோணத்தில் மேலக்காவேரி ஜாமியா நகர் வடக்கு குடியான் தெருவை சேர்ந்த கருப்பையன் சீதாலட்சுமி. 

இவர்களின் மகன்கள் ஆகாஷ் எட்டாம் வகுப்பு ஹரிஷ் ஆறாம் வகுப்பு கொட்டையூர் வள்ளலார் பள்ளியில் படித்து வருகின்றனர் நேன்று இருவரும் பள்ளிக்கு செல்லவில்லை என்று தாய் சீதாலட்சுமி கண்டித்துள்ளார். 

இருவரும் தாயை மிரட்டுவதற்காக விளையாட்டாக வீட்டில் இருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டனர் ஆபத்தான நிலையில் 108 முதலுதவி வண்டி மூலம் கும்பகோணம் அரசு மருத்துமனைக்கு கொண்டு வந்தனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துமனைக்கு இருவரும் 108 முதலுதவி வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே அந்தப் பிஞ்சுகள் இறந்து போயின. 

இருவரும் விளையாட்டாக செய்த செயல் வினையாகிப் போனது. அப்பகுதியில் உள்ளோர் மற்றும் உறவினர்கள் நடுவே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,059.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.