Show all

இணையத்தில் கசியும் சேதி! வலுவான கூட்டணி தமிழ்நாட்டில் அமைத்திட: நிதின், நிர்மலா, ராஜ்நாத், பியூஷ்கோயல் பாஜகவின் சிறப்புப்படை

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணையத்தில் கசியும் சேதி! அரசியல்வாதிகளுக்கே வெளிச்சம். வலுவான கூட்டணி தமிழ்நாட்டில் அமைத்தே தீர வேண்டும் என்பதில் பாஜக ரொம்பவும் தீவிரமாக இருக்கிறது. இதற்காக சிறப்புப் படை ஒன்றை அமைத்திருக்கிறது பாஜக தலைமை. இந்த படையில் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், பியூஷ்.கோயல் ஆகிய நான்கு பேர் இருக்கிறார்கள். இவர்கள்தான் தமிழ்நாடு கூட்டணி தொடர்பான விசயங்களை ஒப்பந்தம் செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த படை கையில் எடுத்திருக்கும் விசயம்: பிரிந்து நிற்கும் அதிமுகவை முதலில் ஒன்று சேர்த்தாக வேண்டும். கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை கவுண்டர் சமுதாயத்து வாக்குகள் எல்லாம் எடப்பாடி கையில் இருக்கிறது. முக்குலத்தோர் வாக்குகள் தினகரன் பக்கம் இருக்கிறது. வன்னியர் சமுதாயத்து வாக்குகள் பாமகவிடம் இருக்கிறது. அதிமுக கூட்டணிக்கு பாமக வருவது என்பது கிட்டதட்ட உறுதியாகி இருக்கிறது. எடப்பாடியும், தினகரனும் ஒன்று சேர்ந்து நம் பக்கம் வந்தால் கவுண்டர்கள், முக்குலத்தோர், வன்னியர் என தமிழகத்தில் தலைமைத்துவமாக இருக்கும் மூன்று சமுதாயத்தின் வாக்குகள் நமக்கு வந்து விடும். இது இல்லாமல் அதிமுகவுக்கென இருக்கும் வாங்கு வங்கி அப்படியே நமக்கு கிடைக்கும். தேமுதிகவையும் நாம் இழுத்துவிட்டால் போதும். அத்துடன் பாஜக வாக்குகளும் சேர்ந்தால், தமிழ்நாட்டில் குறைந்தது நாம் 25 தொகுதிகள் வெற்றி கொள்ள முடியும். நாம் நினைக்கும் இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் அமைந்தே ஆக வேண்டும் என்று அந்த படையில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த விவாதத்துக்குப் பிறகு, படையில் உள்ள ஒவ்வொருவரும் நேரடியாகப் பேசாமல், தங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் மூலமாக ஒருபக்கம் எடப்பாடிக்கும், இன்னொரு பக்கம் தினகரனுக்கும் அழுத்தம் கொடுக்க தொடங்கியிருக்கிறார்கள். அன்புமணிக்கும் கூட சில தொழிலதிபர்கள் பேசியிருக்கிறார்கள். செலவுகளை எல்லாம் நாங்க பார்த்துக்குறோம் என்றெல்லாம் தொழிலதிபர்கள் பேச தொடங்கியிருக்கிறார்கள்.

நாளை தினகரன் அணியில் இருக்கும் பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகத் நாள் கொடுத்திருந்தார் தினகரன். ஆனால் பாஜக தரப்பில் கொடுத்த தொடர் அழுத்தம், அது தொடர்பான பேச்சுவார்த்தை என தினகரன் திடீரென வேலையாகிவிட்டார். அதனால் இன்றில் இருந்து அடுத்த ஒரு கிழமைக்கு அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டார். கூட்டணிக்கு தினகரன் சம்மதித்தால் சிறையில் இருக்கும் சசிகலாவை சட்ட ரீதியாகவே வெளியே கொண்டுவதற்கான ஏற்பாடுகளில் இறங்குவதாக பாஜக தரப்பில் இருந்து தினகரனிடம் பெரிய பேரம் பேசப்படுகிறதாம். உடல் நலக் குறைவாக இருக்கும் சசிகலாவை வெளியே கொண்டுவர இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் தினகரனிடம் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்களாம். இது ஒருபக்கம் இருக்க சிறையில் இருக்கும் சசிகலாவிடமும் இந்தத் தகவல்களை எல்லாம் கொண்டு சென்றிருக்கிறார்கள் பாஜக தரப்பில். தேவைப்பட்டால் தங்களுக்கு தோதான பொது நபர்கள் மூலம் சிறைக்கே சென்று சசிகலாவையும் சந்தித்து சம்மதிக்க வைக்கும் முயற்சியிலும் ஈடுபடத் தயாராகிறது பாஜக என்று முடிந்தது அந்த சேதி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,058.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.