Show all

இந்தியா முழுக்க நல்ல வரவேற்போடு இணையத்தில் தொடர்கள்! ஹிந்தித் தொடர் ஒன்றில் நித்தியா மேனன் கதைத்தலைவி

01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணையத்தில் வெளியாகும் தொடர்களுக்கு இந்தியா முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹிந்தி பிரபலங்களை தொடர்ந்து தென்னிந்திய திரை மின்மினிகளும் இந்த தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

தணிக்கை இல்லை என்பதாலும் குறைந்த முதலீட்டில் தொடரை உருவாக்கி அதிக செலவு இல்லாமல் வெளியிட முடியும் என்பதாலும் இணைய தொடரில் ஆர்வம் காட்டுகிறார்கள். மாதவன் ஹிந்தியில் நடித்த இணைய தொடரான 'பிரீத்' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் இரண்டாவது பருவம் தற்போது தயாராக உள்ளது. முதல் பருவத்தை இயக்கிய மயங் அகர்வால் இந்த பருவத்தையும் இயக்குகிறார். மாதவனுக்குப் பதிலாக அபிஷேக் பச்சன், அமித்சத் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் கதைத்தலைவியாக நித்யா மேனன் இணைந்துள்ளார். இதுவரை திரைப்படங்களில் நடித்து வந்த இவர், இதன் மூலம் இணையத் தொடரில் கால்பதிக்க இருக்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,062.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.